கேக் வெட்டி திடீர் கொண்டாட்டத்தில் இறங்கிய எதிர்நீச்சல் சீரியல் குழு… என்ன காரணம் தெரியுமா?.. வெளியான புகைப்படம்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

கேக் வெட்டி திடீர் கொண்டாட்டத்தில் இறங்கிய எதிர்நீச்சல் சீரியல் குழு… என்ன காரணம் தெரியுமா?.. வெளியான புகைப்படம்..!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ஒன்று தான் எதிர்நீச்சல். திருச்செல்வன் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பெண் அடிமை மற்றும் ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை மக்களுக்கு சீரியல் எடுத்துக்காட்டி வருகின்றது. அதிலிருந்து வீட்டுப் பெண்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்ற விழிப்புணர்வை தான் இந்த சீரியல் மக்களுக்கு காட்டி வருகிறது.

ஜீவானந்தத்திடமிருந்து சொத்துக்கள் அனைத்தையும் எப்படி வாங்குவது என்ற யோசனையில் குணசேகரன் இருக்கும் நிலையில் அவர் சொத்திற்காக அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று பரபரப்பான திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் ஆதிரையை ஹனிமூன் அனுப்பி வைப்பதாக குணசேகரன் கூற பிரச்சனை செய்ய வந்த ஜான்சி ராணி அமைதியாகிவிட்டார்.

இப்படி அடுத்தடுத்து திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்கி 500 எபிசோடுகளை எட்டி விட்டது. இதனால் சீரியல் குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.