படப்பிடிப்பின் போது நடிகர் அருண்விஜய்க்கு ஏற்பட்ட விபத்து.. காலில் கட்டுடன் அவரே வெளியிட்ட புகைப்படம்.. - Cinefeeds
Connect with us

CINEMA

படப்பிடிப்பின் போது நடிகர் அருண்விஜய்க்கு ஏற்பட்ட விபத்து.. காலில் கட்டுடன் அவரே வெளியிட்ட புகைப்படம்..

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய் கடந்த 1995 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன்தான். ஆரம்பத்தில் இவரின் படங்கள் ஹிட் கொடுக்காத நிலையில் அடுத்தடுத்த இவரின் நடிப்பில் வெளியான பல படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.பின்னர் இவரின் திரைப்படங்கள் ஹிட் ஆகாத காரணத்தால் நடிப்பில் இருந்து ஒதுங்கி தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவரின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அந்த படம் அமைந்தது. அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் ஹீரோவாக இருந்தாலும் வில்லனாக இருந்தாலும் இவர் நடிக்கும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தனி ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இவர் தற்போது அச்சம் என்பது மடமையடா, சினம் மற்றும் பார்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அருண் விஜய்க்கு படப்பிடிப்பில் திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் அவரின் கால் விரலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது காலில் கட்டுடன் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் . அது தொடர்பான புகைப்படத்தை அருண் விஜய் பகிர்ந்துள்ள நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.