CINEMA
என் பொண்ணு அதுமாதிரியான அம்மா தான் வேணும்னு கேட்பா…. நடிகை ஷ்ரேயா ஓபன் டாக்…!!

நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் “எனக்கு 20 உனக்கு 18 ” என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். மேலும், அதன் பின் நடிகர் ஜெயம் ரவியுடன் ஜோடியாக “மழை” என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார். அதனைத் தொடர்ந்து இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தமிழ் மற்றும் தெலுங்கு என்று குவிந்தது.மேலும், முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக “சிவாஜி” படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி என்ற பாடல் ஹிட் அடித்தது . இந்நிலையில் நடிகை ஷ்ரேயா பேட்டி ஒன்றில், என்னுடைய பொண்ணு எனக்கு சிவாஜி Mummy தான் வேணும்னு என்கிட்ட கேட்பாள். அந்த பாடலில் என்னை அவளுக்கு ரொம்ப பிடித்துவிட்டது என்று கூறியுள்ளார்.