VIDEOS
ரயில் நிலையத்திற்கு முகத்தை மூடிக்கொண்டு பர்தாவுடன் வந்த தமிழ் நடிகை… அவரே வெளியிட்ட வீடியோ..!!

தமிழ் சினிமாவின் சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுவாதி ரெட்டி. அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடகறி மற்றும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தன்னுடைய 17 வயதில் கலர்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
முதல் வருட கல்லூரி வாழ்க்கையை முடித்த போது சினிமாவில் அறிமுகமானார். டேஞ்சர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் பின்னணி பாடகி ஆகவும் திகழ்கிறார். ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த விமான ஓட்டி விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் சுவாதி ரெட்டி பர்தா அணிந்து ரகசியமாக ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சமீபத்தில் சுவாதி ரெட்டி தன்னுடைய கணவரை விவாகரத்தை செய்கிறார் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது ரயில் நிலையத்திற்கு பர்தா அணிந்து வந்த சுவாதி ரெட்டியின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க