CINEMA
மகள் என்று சொல்லி பழகி திருமணம் செஞ்சிக்கிட்டாரு…. ஷாக் தகவலை பகிர்ந்த வடிவுக்கரசி…!!
அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியவர் முன்னணி இயக்குனராகவும் ஒளிப்பதிவாளர் ஆகவும் இருக்கும் பாலு மகேந்திரா. முதலில் இவர் அகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிகை சோபாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிககை மௌனிகாவோடு லிவிங் ரிலேஷன்ஷிப் இருந்தார். இவர்களில் அகிலா- பாலு மகேந்திராவுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை வடிவுக்கரசி பாலு மகேந்திரா குறித்து கொடுத்த பேட்டி ஒன்றில், எனக்கு சினிமாவில் ஷோபா தான் முதல் தோழி. அவர் கே.கே நகரில் வசித்த பொழுது அடிக்கடி சந்திப்பேன். அப்போது ஷோபாவை பாலு மகேந்திரா திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது எனக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில் பாலு மகேந்திரா ஒருமுறை சோபாவுக்கு என் அன்பு மகளே என்று எழுதி கிப்ட் கொடுத்தார். மகள் மாதிரி பழகிக்கொண்ட அவளையே திருமணம் செய்தது அதிர்ச்சியை கொடுத்தது என்று கூறியுள்ளார்.