LATEST NEWS
“சீருடையின் கண்ணியம் என்னாச்சு..?” காவல்துறை விதிகளை மீறி போலீஸ் செய்த காரியம்.. கொந்தளித்த நெட்டிசன்கள்..!!
காவல்துறை சீருடையின் கண்ணியத்தையும் பெருமையையும் காப்பது ஒவ்வொரு போலீஸ் அதிகாரியின் மிக முக்கியக் கடமையாகும். உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் தாகூர்துவாரா நீதிமன்ற வளாகத்தில், காவலர் சஞ்சய் என்பவர் சீருடையுடன் ‘ரீல்ஸ்’ வீடியோக்களைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட விவகாரம் தற்போது பொதுவெளியில் பெரும் விவாதத்தைக் கிளம்பி உள்ளது. கடமையில் இருக்கும்போது சீருடையின் புனிதத்தன்மையைக் கெடுக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது காவல்துறையின் ஒழுங்குமுறையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
காவல்துறையினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ விதிகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தச் சம்பவம் குறித்து தாகூர்துவாரா வட்டாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விதிகளும் கட்டுப்பாடுகளும் மீறப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட காவலர் மீது தகுந்த துறை ரீதியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
