“அய்யயோ..” ஓடும் ரயிலில் இழுத்து செல்லப்பட்ட பெண்.. மின்னல் வேகத்தில் பாய்ந்து RPF சிங்கப்பெண் செய்த அசாத்திய காரியம்.. மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யயோ..” ஓடும் ரயிலில் இழுத்து செல்லப்பட்ட பெண்.. மின்னல் வேகத்தில் பாய்ந்து RPF சிங்கப்பெண் செய்த அசாத்திய காரியம்.. மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ..!!

Published

on

மகாராஷ்டிராவின் அகோலா ரயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் 17 அன்று, ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள ஆபத்தான இடைவெளியில் தவறி விழவிருந்த 55 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரை, ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவி பெண் சப்-இன்ஸ்பெக்டர் சோனல் இங்கிள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு சாதுரியமாகக் காப்பாற்றியுள்ளார். அந்தப் பெண் பயணி ஓடும் ரயிலில் இறங்க முயன்றபோது நிலைதடுமாறி தண்டவாள இடைவெளியில் இழுத்துச் செல்லப்பட்ட நொடியில், அங்கிருந்த சோனல் இங்கிள் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பாய்ந்து சென்று அவரைப் பத்திரமாக மீட்ட வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மிகவும் நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், ஆர்.பி.எஃப் பெண் அதிகாரி சோனல் இங்கிள் வெறும் 7 நாட்களுக்குள் செய்த இரண்டாவது உயிர்காக்கும் உன்னதப் பணி இதுவாகும் . கடமை உணர்வோடு செயல்பட்டு ஒரு வாரத்திற்குள் இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய அவரது இந்த அசாத்திய தைரியத்தையும், உன்னதமான சேவையையும் பொதுமக்கள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் சமூக வலைதளவாசிகள் என அனைத்துத் தரப்பினரும் ஒருசேரப் பாராட்டி, அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றன

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in