VIDEOS
கடைசி மூச்சுடன் உயிருக்கு போராடும் அங்காடி தெரு பட நடிகை…. மருத்துவமனையில் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ…!!!

தமிழில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் அங்காடி தெரு. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சிந்து. அதன் பிறகு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வந்த இவர் கொரோனா காலகட்டத்தில் உணவு இல்லாமல் தவித்தவர்களுக்கு உதவி செய்தார்.
இப்படி சேவை மனம் படைத்த இவர் தற்போது கேன்சர் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் , எனக்கு கடந்த 2020ஆம் ஆண்டு கேன்சர் வந்தது. அதனால் எனது மார்பகங்கள் அகற்றப்பட்டன. அன்றிலிருந்து நாட்டு மருத்துவம், ஆங்கில மருத்துவம் என வைத்தியத்தை மாறி மாறி பார்த்துவருகிறேன். ஆனாலும் மீள முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் இருந்து அழுதபடி அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். கண்ணீர் மல்க அந்த வீடியோவில் அவர் பேசியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க