CRIME
“வா பாப்பா போன் காட்டுறேன்.. ஆசைவார்த்தை கூறி 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. காம கொடூரன் போனில் இருந்த ‘அந்த’ வீடியோக்கள்… பதறவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரின் மச்ரெஹாட்டா பகுதியில், 12 வயது சிறுமியைக் மொபைல் போன் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த ஜப்பார் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் மொபைல் போன் மீதான ஆர்வத்தில் அந்தச் சிறுமி ஜப்பாருடன் சென்றுள்ளார். அங்கு அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஜப்பார், பின்னர் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்; சிறுமியின் கழுத்தில் நகக்கீறல்கள் இருந்ததாகத் தடயங்கள் கூறுகின்றன. குற்றவாளியின் மொபைல் போனைப் பரிசோதித்த போது, அவர் குழந்தைகளுக்கெதிரான ஆபாசக் உள்ளடக்கங்களை வழக்கமாகப் பார்த்து வந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்துள்ளது.
இக்கொடூரக் குற்றச் சம்பவத்தை அடுத்து, சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் உதவியுடன் விரைந்த காவல்துறையினர், சிறுமியின் ஆடைகளில் இருந்த வாசனையை வைத்து ஜப்பாரை நேடியாகக் கண்டறிந்தனர். மேலும், சம்பவ நேரத்தின் போது அவரது மொபைல் போன் இருப்பிடமும் குற்றச் நடந்த இடத்தின் அருகிலேயே இருந்ததை உறுதி செய்த போலீஸார், அவரைத் தங்களது காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் எந்தவிதக் காதல் விவகாரமும் இல்லை என்றும், மொபைல் போனைப் பார்க்கும் சிறுமியின் ஆர்வத்தைப் பயன்படுத்தியே இந்த கொடூரக் குற்றம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது
