“ஏன்டா இப்படி பண்றீங்க..” கழுத்தில் கயிறு… 6 பக்கமும் பைக்குகள்.. கைதட்டலுக்காக உயிரைப் பணயம் வைத்த வாலிபருக்கு நேர்ந்த கொடூர கதி.. திக் திக் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஏன்டா இப்படி பண்றீங்க..” கழுத்தில் கயிறு… 6 பக்கமும் பைக்குகள்.. கைதட்டலுக்காக உயிரைப் பணயம் வைத்த வாலிபருக்கு நேர்ந்த கொடூர கதி.. திக் திக் வீடியோ..!!

Published

on

கூட்டத்தினரின் பாராட்டைப் பெற வேண்டும் என்ற நோக்கில் ஆபத்தான முறையில் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் சாகசச் செயல் ஒன்று, நபர் ஒருவரை மரணத்தின் விளிம்பு வரை கொண்டு சென்ற திடுக்கிடும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட 39 வினாடிகள் கொண்ட அந்தக் காணொளியில், ஒரு நபரின் கழுத்து மற்றும் உடலின் மேற்பகுதியில் கட்டப்பட்ட கயிறுகள், ஆறு மோட்டார் சைக்கிள்களுடன் இணைக்கப்பட்டு வெவ்வேறு திசைகளில் இழுக்கப்படுகின்றன. மோட்டார் சைக்கிள்கள் வேகம் எடுத்தவுடன் கயிறுகள் இறுக்கமடைந்து, அந்த நபர் மூச்சுவிடத் திணறி, முகம் வீங்கிய நிலையில் தரைமட்டமாகச் சரிந்து புழுதிக்கு நடுவே கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்டார்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடிச் சென்று அந்த நபரை மீட்க முயன்ற போதிலும், சில பைக் ஓட்டுநர்கள் ஆபத்தை உணராமல் தொடர்ந்து வாகனங்களை இயக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு இரவு நேரக் கிராமப்புற விழாவில் எடுக்கப்பட்டதாகத் தோன்றும் இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்ற விவரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், “முட்டாள்தனமான விளையாட்டுகளுக்கு இத்தகைய ஆபத்தான பரிசுகளே கிடைக்கும்” என்று சமூக ஊடகப் பயனர்கள் பலரும் போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கையின்றி உயிரைப் பணயம் வைத்துச் சாகசத்தில் ஈடுபட்ட இந்த நபரை இணையத்தில் கடுமையாக விமரிசித்து வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in