விஜய் டிவியில் சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் அமுதவாணன்.

இவர் காமெடியன், நடன கலைஞர் மற்றும் நடிகர் என்று பன்முக திறமை கொண்டவர். இவர் கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு மற்றும் அது இது எது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இவர் தன்னுடைய காமெடியால் அனைவரையும் சிரிக்க வைப்பதால் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. மதுரையில் பிறந்த இவரின் வீட்டில் மொத்தம் ஆறு பேர். இதில் கடைசி பையன் தான் அமுதவாணன்.

பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்.

இறுதிவரை இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அமுதவாணன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை அவரின் அப்பா வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அதன் பிறகு உடல்நிலை சரியில்லாததால் சொந்த ஊருக்கு திரும்பியதால் வீட்டில் வருமை தலைவிரித்து ஆள தொடங்கியது.

இதனால் அமுதவாணன் வேலைக்கு செல்ல தொடங்கினார். அப்போதுதான் இவருக்கு கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

படிப்படியாக பல வெற்றிகள் கிடைத்தாலும் இவருக்கு வருமானம் குறைவாக தான் கிடைத்தது. அதன் பிறகு ஓரளவு சம்பளம் பெற்று இன்று பலரும் கொண்டாடும் அளவிற்கு முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

அமுதவாணனுக்கு திருமணம் ஆகி மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அமுதவாணன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.