VIDEOS
மறைந்த விவேக்கின் பணியை கையில் எடுத்த செல் முருகன்… பெரிய சல்யூட்டே அடிக்கலாம்… வைரலாகும் வீடியோ..!!

உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களை பல ஆண்டுகளாக சிரிக்க வைத்து வந்தவர் தான் சின்ன கலைவாணர் விவேக். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். இவ்வாறு ஏராளமான மக்களின் மனதை வென்ற விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால் மற்ற நடிகர்களை விட விவேக் உடன் எப்போதும் நிழலாக இருந்து வந்தது செல் முருகன் தான். பிரபல காமெடி நடிகரான செல் முருகனுக்கு விவேக்கின் மரணம் பேரிழப்பாக அமைந்தது. இந்த நிலையில் விவேக் இருந்திருந்தால் இந்த நேரம் என்ன செய்திருப்பாரோ அதனை அவரின் நினைவாக தற்போது செல் முருகன் செய்து வருகிறார்.
விவேக் உடன் பல திரைப்படங்களில் துணை காமெடியனாக நடித்து வந்த நகைச்சுவை நடிகர் செல் முருகன் தற்போது ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரி ஆக சென்று விவேக்கின் மிகப்பெரிய கனவான மரம் நடும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். சமீபத்தில் கூட அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
தற்போது சாவிதா இன்ஜினியரிங் காலேஜில் மாணவர்களுடன் சேர்ந்து மரம் நட்டார். விவேக்கின் பணியை தற்போது கையில் எடுத்து மரக்கன்றுகளை நட்டு வரும் செல் முருகனுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க