VIDEOS
சிறுவயதில் ரிமோட் கார் மீது ஆசை… தனுஷ் என்ன செய்தார் தெரியுமா?… பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவை தாண்டி தற்போது கோலிவுட் வரை கலக்கி கொண்டிருக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக இருந்து வரும் இவருடைய நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதில் நடிகர் தனுஷ் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷ் சிறுவயதில் ஒரு ரிமோட் கார் மீது ஆசை கொண்டு தற்போது மிக விலை உயர்ந்த காரை வாங்கி எவ்வித பயன்பாட்டிற்கும் இல்லாமல் வீட்டில் நிறுத்தி வைத்துள்ளார். அது தொடர்பான சுவாரசியமான தகவலை சேயார் பாலு பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.