#image_title

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் சூட்டிங் ஜனவரி முதல் வாரத்தில் பூஜையுடன் தொடங்கிய நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக பட குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று திரைப்படத்தின் பூஜை வீடியோவை பட குழு வெளியிட்ட நிலையில் அந்த பூஜை வீடியோவில் விஜய் மற்றும் திரிஷா அருகில் ஒரு சின்ன பெண் குழந்தை நின்று இருந்தது. அந்த குழந்தை தளபதி 67 திரைப்படத்தில் விஜய் மகளாகத்தான் நடிப்பார் என கூறப்படுகின்றது. தற்போது அந்த பெண் குழந்தை யார் என்ற விவரமும் வெளியாகி உள்ளது. அதாவது பிரபல காமெடி நடிகர் அர்ஜுனனின் மகள் இயல் தான் அவர். டிக் டிக் டிக் மற்றும் காதலில் சொதப்புவது எப்படி போன்ற திரைப்படங்களில் நடித்தவர் அர்ஜூன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Arjunan Actor இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@arjunan_actor)