Uncategorized
இதை சாப்பிட வேண்டும்… இதை சாப்பிட்டால் மூலநோய் உள்ளவர்களுக்கு முழுமையாக குணமடைவார்கள்…?

பப்பாளியில் இருக்கும் மகத்துவம் பலருக்கும் தெரிவதில்லை. மறுபுறம் தினசரி உணவுகளில் பப்பாளியையும் எடுத்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேசமயம் பப்பாளியின் சந்தையும் நாளுக்கு நாள் அதிகமாக இருக்கிறது. அப்படி பப்பாளியில் என்ன நன்மை இருக்கிறது என்று தெரியுமா?
பப்பாளியில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதனால் நோய் ஏற்படுத்தக் கூடிய நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும்.
விட்டமின் k மற்றும் c சத்துக் குறைபாடுக் காரணமாகத்தான் எலும்பு முறிவு பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது. இந்த இரண்டு சத்துகளும் பப்பாளியில் அதிகமாக இருக்கிறது.
அழகு பராமரிப்பிற்கும் உதவக் கூடியது. சருமத்தை புத்துணர்வாக வைத்துக் கொள்வதிலும், பருக்கள் இல்லா தெளிவான முகத்தைப் பெறவும் பப்பாளி பேருதவியாக இருக்கிறது
இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பெப்ரவரி, மார்ச் மாதங்களும், மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.எளிதில் கிடைப்பது விலை மலிவானது எல்லாக் காலங்களிலும் விளைவது போன்ற சிறப்புத்தன்மை பெற்றுள்ளதால் ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.
பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும். பார்ப்பதற்கு கரு மிளகு போன்றிருக்கும்.