CINEMA
விஜய் டிவி பிரபலம் புகழ் மகளின் கியூட் புகைப்படம்…. முதல் பிறந்தநாளில் வெளியிட்ட தந்தை புகழ்….!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது சபாபதி, வலிமை மற்றும் யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜூகிப்பர் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
இதற்கிடையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பென்சி என்பவரை ஐந்து வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தன்னுடைய மகள் ரிதன்யாவின் முதல் பிறந்தநாளிற்கு புகழ் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதாவது என் வாழ்வை மாற்றிய பொக்கிஷம் நீ வந்த நாளிலிருந்து எங்கள் வாழ்க்கை வசந்தமாக மாறியது. முதன்முதலாக உன்னை என் கைகளில் ஏந்தியது என்னால் மறக்கவே முடியாது. இனிவரும் காலம் முழுவதும் எங்கள் வாழ்வை கருவறையாக்கி உன்னை சுமக்க போகிறோம் .மகளாய் வந்துள்ள மகராணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram