CINEMA
நிறைமாத வயிற்றுடன் விஜய் டிவி புகழின் மனைவி.. இவ்ளோ நாள் மறச்சிட்டீங்களே புகழ்.. வெளியான அழகிய புகைப்படம்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது சபாபதி, வலிமை மற்றும் யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜூகிப்பர் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
இந்த நிலையில் புகழ் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பென்சி என்பவரை ஐந்து வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் கோமாளியாக அசத்தி வந்தார். இந்நிலையில் புகழ் மனைவி பென்சி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை புகழ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், என்னுடைய வளர்ச்சியில் வழி துணையாய் வந்தவள் இப்போது என்னை என் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள். என்னை தகப்பன் ஆக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள் என்று கூறி இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பெண்சி என்று அவர் பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனை தொடர்ந்து புகழுக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க