LATEST NEWS
40 வயதில் பிரபல நடிகருடன் காதல்.. நெருக்கமாக புகைப்படத்தை வெளியிட்ட ராமன் தேடிய சீதை பட நடிகை.. விரைவில் டும் டும்..!!

தமிழ் சினிமாவில் பொய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் மலையாள நடிகையான விமலா ராமன். சூப்பர் ஸ்டார் முதல் விமலா ராமன் வரை அனைவரையும் அறிமுகம் செய்து வைத்த புகழ் இயக்குனர் கே பாலசந்தருக்கு சேரும். விமலா ராமன் பொய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு சேரன் நடித்த ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபலமான நாயகியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இறுதியாக 2019 ஆம் ஆண்டு வெளியான இருட்டு என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே 40 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இவரின் திருமணம் குறித்து பல இடங்களில் கேட்கப்பட்ட போதிலும் இவர் அது தொடர்பாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இவர் நடிகர் வினய்யை நீண்ட காலமாக காதலித்து வருவதாகவும் இருவரும் பல இடங்களுக்கு டேட்டிங் சென்றுள்ளதாகவும் அடிக்கடி தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் விமலா ராமன் வினய்யுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி இவர்களின் காதலை உறுதிப்படுத்தி உள்ளது. எனவே இவர்களின் திருமணம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.