என்னது, அஜித்தை வைத்து விஜயின் மகன் படம் இயக்குகிறாரா?.. அப்போ அவரு இல்லையா?.. என்னடா குழப்புறீங்க..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது, அஜித்தை வைத்து விஜயின் மகன் படம் இயக்குகிறாரா?.. அப்போ அவரு இல்லையா?.. என்னடா குழப்புறீங்க..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் மகன் சஞ்சய் தனது தந்தையை போலவே சினிமாவில் காலடி எடுத்து வைக்க தற்போது தயாராகி வருகின்றார்.  அதேசமயம் தற்போது சஞ்சய் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நிலையில் இவர் இயக்கம் முதல் படத்தை வைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். முதல் படமே லைகா போன்ற பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் கமிட்டாகி உள்ள சஞ்சய் லைகா நிறுவனர் சுபாஷ்ரணை சந்தித்து அவருடன் எடுத்த புகைப்படங்கள் வைரலானது.

இதற்கு முன்பு சில குறும்படங்களை இயக்கியுள்ள சஞ்சய் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளது கோலிவுட்டிற்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க சஞ்சய் இயக்கம் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளது யார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் சஞ்சய் இயக்கம் முதல் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

அதே சமயம் சஞ்சய் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய அப்பாவுக்கு அடுத்ததாக மிகவும் பிடித்த நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் அஜித் என்று கூறியிருந்தார். அது மட்டும் அல்லாமல் அஜித் என்றால் கெத்து என்று ஒரு வார்த்தையில் நச்சுன்னு பதில் சொன்னார். மேலும் அஜித் சஞ்சய்க்கு போன் செய்து வாழ்த்து கூறியதாகவும் அவரிடம் அந்த உரையாடலில் தனக்கு ஒரு கதை சொல்லும்படி அஜித் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே அஜித்தை வைத்து படம் இயக்க உள்ளதாகவும் ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in