நடிகர் கார்த்தியை வைத்து அடுத்த படத்தை இயக்கும் 96 பட இயக்குனர்.. ஆக்சன் ஹீரோ இதுலயும் இருக்காரா?.. அப்போ வேற லெவலில் இருக்க போகுது..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் கார்த்தியை வைத்து அடுத்த படத்தை இயக்கும் 96 பட இயக்குனர்.. ஆக்சன் ஹீரோ இதுலயும் இருக்காரா?.. அப்போ வேற லெவலில் இருக்க போகுது..!!

Published

on

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரையும் கவர்வது பெரும்பாலும் காதல் திரைப்படங்கள் தான். அதிலும் குறிப்பாக இதுவரை வந்த காதல் தோல்வி திரைப்படங்களில் முதல் இடத்தில் இருக்கும் படம் எதுவென்றால் அனைவரும் நினைவிற்கும் வருவது 96 தான். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்த அசத்து இருப்பார். இந்த படம் வெளிவந்த சமயத்தில் பட்டி தொட்டி எல்லாம் பரவலானது. தமிழில் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் சமந்தா நடிப்பில் இந்த திரைப்படம் வெளியானது. இருந்தாலும் தமிழ் படம் வெற்றி பெற்ற அளவிற்கு தெலுங்கில் இது அமையவில்லை.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருந்த நிலையில் முதல் படமே பெரிய வெற்றி கொடுத்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக இயக்குனர் பிரேம்குமார் படம் எதையும் அறிவிக்காமல் இருந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவர் இயக்கும் படம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி பிரேம் குமாரின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். கோவிந்தா வசந்தா இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ள நிலையில் பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கின்றார்.

Advertisement

2d என்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இந்த திரைப்படம் ஒரு கிராமத்து கதையை மையமாகக் கொண்டதாகவும் தஞ்சாவூர் பகுதியில் எடுக்கப்பட உள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் கார்த்திக்கின் பெரிப்பா கதாபாத்திரத்திலும் அரவிந்த்சாமியின் தாய்மாமனாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in