மாமன்னன் படத்திற்கு பிறகு சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகர் வடிவேலு… அதுக்குன்னு இத்தனை கோடியா..?? - Cinefeeds
Connect with us

CINEMA

மாமன்னன் படத்திற்கு பிறகு சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகர் வடிவேலு… அதுக்குன்னு இத்தனை கோடியா..??

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இன்றும் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் காமெடி நடிகர் வடிவேலு. இவரின் நகைச்சுவைக்கு சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களின் எப்போதும் இவரது பெயர்தான். ஒரு ட்ரோல் செய்தால் கூட அதில் கட்டாயம் வடிவேலு பெயர் இடம் பெற்று இருக்கும். சமூக வலைத்தளங்களின் நெட்டிசனல் பலரும் இவரை வைத்து தான் ட்ரோல் செய்கின்றனர்.

அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர். நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடித்த நிலையில் அதே சமயம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சந்திரமுகி 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ள நிலையில் அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு மாமன்னன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார். அதாவது இனிவரும் படங்களில் தன்னுடைய சம்பளத்தை வடிவேலு 5 கோடி வரை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இது சினிமா வட்டாரத்தில் பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.