CINEMA
மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் வாங்கிய கயல் ஆனந்தி…. அவர் சொன்ன அந்த விஷயம் சூப்பர்….!!
தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஆனந்தி. இந்த திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகியாக நடித்த ஆனந்திக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. இன்னும் சொல்லப்போனால் இந்த திரைப்படத்தில் நடித்து முடித்ததற்கு பிறகு இவர் கயல் ஆனந்தி என்றுதான் அனைவராலும் அழைக்கப்படுகிறார். இதனை தொடர்ந்து வெற்றிமாறனின் விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதேசமயம் ஜிவி பிரகாஷ் உடன் த்ரிஷா இல்லனா நயன்தாரா, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, சண்டிவீரன் மற்றும் மன்னார் வகையறா போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் தன் மகனுக்கு சாதி இல்லை என்று சான்றிதழ் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், இந்த புரிதல் எனக்கு மட்டுமில்லை என்னோட கணவர் வீட்டுலயும் இந்த புரிதல் இருக்கிறது என்று கூறியுள்ளார்.