நடிகை சங்கீதா – கிரிஷ் தம்பதியின் மகளை பார்த்துள்ளீர்களா?….. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை சங்கீதா – கிரிஷ் தம்பதியின் மகளை பார்த்துள்ளீர்களா?….. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சங்கீதா.இவர் நடிகர் நெப்போலியன் நடித்த பகவத்சிங் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே பல மலையாள திரைப்படங்களில் நடித்தவர்.இவர் இறுதியாக கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நெருப்புடா என்ற திரைப்படத்தில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்னத்திரை பக்கம் திரும்பினார். இறுதியாக கலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனிடையே இவர் பாடகர் கிரீஸ்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

திருமணமாகி மூன்று வருடங்கள் கழித்து இவர்களுக்கு ஷிவியா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து தன்னுடைய மனைவி சங்கீதா மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட ஒரு அழகிய புகைப்படத்தை க்ரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in