LATEST NEWS
சமந்தாவை தொடர்ந்து இவருக்குமா?…. அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!
தென்னிந்திய சினிமா அளவில் நடிகைகள் பலருக்கும் சமீப காலமாக பல நோய்த்தொற்றுகள் இருப்பதாக வெளிவரும் செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா மயோசிடிஸ் சென்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்த நிலையில் அவர் தற்போது குணமாகி வருகிறேன் என கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசனும் மன உளைச்சல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வருவதாக கூறியிருந்தார்.
இவ்வாறு பல நடிகைகள் நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில் தற்போது நடிகர் விஷாலுடன் சிவப்பதிகாரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபலமான நடிகை மம்தா மோகன்தாஸ் ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். 38 வயதான இவர் தோல் நிறமி இழத்தல் என்ற அரிய வகை நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படத்துடன் ஒரு பதிவை பகிர்ந்துள்ள நிலையில் அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
