LATEST NEWS
அடடே நம்ப சூப்பர் சிங்கர் பிரித்திகாவா இது?…. ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!
விஜய் டிவியில் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பலரும் வெளியில் சென்று பட வாய்ப்பு பெற்று பிரபலமாகி விடுகிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் கிராமத்து சிறுமி பிரித்திகா. கூரை வீட்டு பின்னணியில் இருந்து ஏழ்மையான குடும்பத்திலிருந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் டைட்டில் வின்னர் ஆகவும் தேர்வு செய்யப்பட்டார்.
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட் ஒன்றை தட்டிச்சென்ற இவர் சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரே ஒரு பாடலை மட்டும் பாடியுள்ளார். அதன் பிறகு இவர் குறித்த எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. தற்போது இணையத்தில் ஆக்டிவ் ஆக இருந்து youtube சேனல் ஆரம்பித்து பாடல்களை பாடிவரும் இவர் 18 வயதை எட்டி இருக்கும் நிலையில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். சமீபத்தில் அவர் பகிர்ந்து உள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
