“மனுஷனா நீங்க?”.. காரின் கதவு கொடுத்த மரண அடி.. நொடியில் தலைகீழாக மாறிய பைக்.. கண்டு கொள்ளாத கார் ஓட்டுநர்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மனுஷனா நீங்க?”.. காரின் கதவு கொடுத்த மரண அடி.. நொடியில் தலைகீழாக மாறிய பைக்.. கண்டு கொள்ளாத கார் ஓட்டுநர்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!

Published

on

தொழில்நுட்பம் வளர்ந்து கார்களில் ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகள் வந்த பிறகும், சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஒரு விபத்து என்பது வெறும் வாகனச் சேதம் மட்டுமல்ல, அது ஒரு ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியையும், எதிர்காலத்தையும் ஒரே நொடியில் சிதைத்துவிடுகிறது. இந்நிலையில் கார் விபத்து பற்றிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் காரை நிறுத்திய அந்த நபர், முன்னும் பின்னும் எந்தவொரு வாகனமாவது வருகிறதா என்று பார்க்காமல், திடீரென காரின் கதவைத் திறந்துள்ளார். அந்த நேரத்தில் வேகமாக வந்த இருசக்கர வாகனம், எதிர்பாராதவிதமாக காரின் கதவில் மோதி விபத்துக்குள்ளானது.

कार वाले की जाहिलियत
बिना आगे पीछे देखे दरवाना खोल दिया

और बाइक वाले की हेल्प भी नहीं कर रहा कार का दरवाजा देख रहा है टूटा तो नहीं है

इसलिये सभी सावधानी ‼️ से बाइक चलाए और
किसी का कोई भरोसा नहीं

हादसा कभी भी हो सकता है pic.twitter.com/IZaBaAXCrt— Heena (@Heena895) July 17, 2026

இந்த விபத்தை விடவும் பார்ப்போரை உலுக்கிய விஷயம் என்னவென்றால், கீழே விழுந்த பைக் ஓட்டுநருக்கு உதவ முன்வராமல், அந்த காரோட்டி தனது காரின் கதவு உடைந்திருக்கிறதா என்று மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். மனிதநேயமற்ற இந்த செயல் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. எனவே, சாலையில் செல்லும் போது யாருடைய அலட்சியத்தாலும் எப்போது வேண்டுமானாலும் விபத்து நேரலாம் என்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in