“அது என் அப்பாவே இல்ல” 37 வருஷமா 4 கி.மீ தூரத்துல தான் இருந்திருக்கோம்.. மருத்துவர்களின் அலட்சியம்… டிஎன்ஏ டெஸ்ட்டில் தெரிந்த பகீர் உண்மை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அது என் அப்பாவே இல்ல” 37 வருஷமா 4 கி.மீ தூரத்துல தான் இருந்திருக்கோம்.. மருத்துவர்களின் அலட்சியம்… டிஎன்ஏ டெஸ்ட்டில் தெரிந்த பகீர் உண்மை..!!

Published

on

சீனாவில் 37 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையின் அலட்சியத்தால் பிறந்தவுடன் மாறிய இரு பெண்கள், தாங்கள் வளர்ந்த வீடுகள் வெறும் 4 கிலோமீட்டர் தொலைவில்தான் அமைந்திருந்தன என்ற அதிர்ச்சி உண்மையை அண்மையில் கண்டறிந்துள்ளனர். கடந்த 1989-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஹுவாங் சியாவோலின் மற்றும் லி ஹுய் ஆகிய இரு பெண்களும் வெறும் 55 நிமிட இடைவெளியில் பிறந்துள்ளனர். அப்போது குழந்தைகளுக்கு அடையாள மணிக்கட்டு பட்டைகள் கட்டப்படாததாலும், ஒரே மாதிரியான ஆடைகளை அணிவித்திருந்ததாலும் ஏற்பட்ட குழப்பத்தில் இரு குழந்தைகளும் மாறிப் போயுள்ளனர்.

இதில் ஹுவாங் அரசு ஊழியர்களான வசதியான தம்பதியினரிடமும், லி ஒரு சிறிய மளிகைக் கடை நடத்தும் எளிய குடும்பத்திலும் வளர்ந்துள்ளனர். ஹுவாங் தனது வளர்ப்புத் தந்தையுடன் ஏற்பட்ட ரத்த வகை முரண்பாடு மற்றும் மனக்கசப்பு காரணமாக, அவருக்கும் தனக்குமான உறவைச் சீரமைக்க 2022-இல் டிஎன்ஏ பரிசோதனை செய்துள்ளார். அப்போதுதான் தான் வளரும் குடும்பத்திற்கும் தனக்கும் எந்த ரத்த சம்பந்தமும் இல்லை என்ற அதிர்ச்சி உண்மை அவருக்குத் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையின் உதவியுடன் கடந்த ஆண்டு தனது உண்மையான பெற்றோரைக் கண்டறிந்த போது, மற்றொரு பெண்ணான லியும் அதே பகுதியில் வளர்ந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

Advertisement

வறுமையான சூழலில் வளர்ந்த லி, குடும்ப கஷ்டம் காரணமாகப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுப் பல வேலைகளைச் செய்துள்ளார். இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு ரத்தக் கோளாறு மற்றும் அறுவை சிகிச்சை வரை சென்றுள்ளார். ஒரு கஃபேவில் முதல்முறையாகச் சந்தித்துக் கொண்ட இவ்விரு பெண்களும், தங்களது வாழ்க்கை மாறியதை எண்ணி நெகிழ்ந்துள்ளனர். எனினும், தங்களை வளர்த்தெடுத்த குடும்பத்துடனான உறவையே தொடர்ந்து தொடரப்போவதாக அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதே சமயம், தங்களது பிறப்புப் பதிவேடுகளைத் தொலைத்துவிட்டதாகக் கூறிப் பொறுப்பற்ற முறையில் பதிலளித்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை தற்பொழுது விவாதமாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in