CRIME
அய்யோ கடவுளே.. கல்லூரி தாண்டியா கொண்டாட்டத்தில் பயங்கரம்.. திடீரென சரிந்து விழுந்த ராட்சத விளக்கு.. அலறியடித்து ஓடிய மாணவர்கள்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான நாதர்குல்லில் உள்ள எம்.வி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நவராத்திரி தாண்டியா கொண்டாட்டத்தின் போது, கனரக மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த இரும்புத் தூண் கட்டமைப்பு திடீரென கூட்டத்தின் மீது சரிந்து விழுந்ததில் ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். விபத்து நடந்தவுடனே அதிர்ச்சியடைந்த கல்லூரி ஊழியர்களும் மற்ற மாணவர்களும் காயமடைந்தவர்களை மீட்டு, அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சேர்த்தனர். இந்த திடீர் விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், பலத்த காற்றின் காரணமாகவே இந்த இரும்புத் தூண் சரிந்து விழுந்திருக்கலாம் என முதற்கட்ட போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது.
இந்தக் கொடூர விபத்தில் மாணவி உயிரிழந்த செய்தியைக் கேட்டு தெலங்கானா முதல்வர் ஏ. ரெவந்த் ரெட்டி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அவர், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்துக்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்பூர்வமாக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் நேரடியாக அறிவுறுத்தியுள்ளார்.
