LATEST NEWS
விவாகரத்திற்கு பிறகு இப்படியா?…. ஆண் நண்பருடன் நெருக்கமாக புகைப்படம் வெளியிட்டு ஷாக் கொடுத்த டிடி….!!!!
விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இதனிடையே பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி தற்போது உடல் நல குறைவு காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார்.
முக்கியமான படங்களின் ப்ரோமோஷன் இன்டர்வியூ மட்டும் தொகுத்து வழங்கி வரும் இவர் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். இதனிடையே டிடி ஸ்ரீகாந்த் என்பவருடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் சில மாதங்களில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இந்நிலையில் டிடி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் டிஆர் என குறிப்பிட்டு ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
