“செல்வமகள் திட்டத்தில் செம ஜாக்பாட்…! ரூ.50 லட்சம் அள்ளும் அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணாதீங்க..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“செல்வமகள் திட்டத்தில் செம ஜாக்பாட்…! ரூ.50 லட்சம் அள்ளும் அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணாதீங்க..!!”

Published

on

மத்திய அரசின் செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்பது பெண் குழந்தைகளின் எதிர்காலக் கல்வி மற்றும் திருமணத் தேவைகளுக்காகச் செயல்படும் ஒரு சிறந்த சேமிப்புத் திட்டமாகும். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களின் பெற்றோர்கள் அல்லது காப்பாளர்கள் அஞ்சலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இக்கணக்கைத் தொடங்கலாம். இத்திட்டத்தில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்ய முடியும்.

இத்திட்டத்திற்கு அரசு தற்போது ஆண்டிற்கு 8.2% வட்டி வழங்குகிறது. கணக்குத் தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து பணம் செலுத்த வேண்டும்; 21 ஆண்டுகள் நிறைவடையும் போது இத்திட்டம் முதிர்ச்சியடையும். மேலும், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-ன் கீழ் செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதோடு, முதிர்வின் போது கிடைக்கும் தொகைக்கும் முழுமையான வரி விலக்கு பொருந்தும்.

Advertisement

ஒருவர் ஆண்டுதோறும் அதிகபட்ச வரம்பான ரூ1.5 லட்சத்தை 15 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்தால், அவர் செலுத்தும் மொத்த அசல் தொகை ரூ.22.5 லட்சமாகும். 8.2% கூட்டு வட்டி அடிப்படையில் 21-வது ஆண்டில் திட்டம் முதிர்வடையும் போது, தோராயமாக ரூ.69.2 லட்சம் வரை மொத்தத் தொகையாகக் கிடைக்கும். இதில் முதலீடு செய்த அசல் போக, வட்டியாக மட்டுமே சுமார் ரூ.47முதல் 50 லட்சம் வரை ஈட்ட முடியும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in