தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து தனது கணவரின் இழப்பிலிருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நடிகை மீனா மீண்டு வருகிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது மீனா மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் கணவரின் இழப்பிற்கு பிறகு மீண்டு வரும் வீணாவிற்கு மகிழ்ச்சியை அள்ளித் தரும் விதமாக கலா மாஸ்டர் ஒரு விஷயத்தை செய்யப் போகிறார். அதாவது திரை உலகில் மீனா 40 ஆண்டு காலம் நிறைவு செய்துள்ள நிலையில் மீனா 40 என விழா ஒன்றை அவர் நடத்த உள்ளார். 1982 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய மீனா கடந்த 2022 ஆம் ஆண்டு 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால் இந்த விழாவை நடத்துவதற்கு கலா மாஸ்டர் திட்டமிட்டுள்ளார். இந்த விழாவில் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.