#image_title

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை மகாலட்சுமி சில வருடங்களுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்து மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருப்பதியில் திருமணம் முடித்தனர்.

இவர்களின் திருமணம் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கணவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை தொடர்ந்து அவர் பகிர்ந்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் ஆடை அணிகலன்களை விளம்பரம் செய்து சைடு பிசினஸ் செய்து வருகிறார் மகாலட்சுமி.

இதனிடையே ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நிலையில் நேற்று தைப்பூசம் அதுவும் கோவிலுக்கு சென்று முருகன் இருக்க பயம் ஏன் என்று மனைவியுடன் எடுத்த க்யூட் புகைப்படத்தை ரவீந்தர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ravindar Chandrasekaran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ravindarchandrasekaran)