ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல… 3,50,000 பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காத்த தேவதை.. கின்னஸ் புத்தகத்தையே மிரள வைத்த டெக்சாஸ் தாய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல… 3,50,000 பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காத்த தேவதை.. கின்னஸ் புத்தகத்தையே மிரள வைத்த டெக்சாஸ் தாய்..!!

Published

on

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அலிசா ஓக்லெட்ரி என்ற 36 வயது பெண்மணி, 2,645 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கிப் புதிய கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டில், இவர் 1,569 லிட்டர் தாய்ப்பாலைத் தானம் செய்து உலக சாதனைப் படைத்திருந்தார். தற்போது அந்தச் சாதனையைத் தானே முறியடித்து, தனது தாராள மனதால் மீண்டும் உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.

அலிசா ஓக்லெட்ரி வழங்கிய இந்த அசுர அளவிலான தாய்ப்பால் தானத்தின் மூலம், உலகளவில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்கூட்டியே பிறந்த பச்சிளம் குழந்தைகள் பயனடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காக்கும் உன்னத நோக்கத்துடன் அவர் செய்த இந்த அரிய அற்பணிப்புச் செயல், உலகளவில் பெரும் பாராட்டுகளையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in