VIDEOS
இவரா இப்படி?… விமானத்தில் கரீனா கபூர் செய்த செயல்… வெளிச்சம்போட்டு காட்டிய இன்போசிஸ் ஓனர்… வைரல் வீடியோ..!!

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான நாராயண மூர்த்தி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகை கரீனா கபூர் பற்றி பேசி உள்ளார். அதாவது ஒரு முறை லண்டனில் இருந்து விமானத்தில் வரும்போது அருகில் நடிகை கரீனா கபூர் அமர்ந்திருந்ததாகவும் அவரை பார்த்ததும் நிறைய பேர் அவரிடம் வந்து ஹலோ சொன்ன நிலையில் அவர்களை எல்லாம் அவர் கண்டு கொள்ளாமல் உதாசனம் படுத்தினார்.
அதனைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்னை பார்ப்பதற்கு யார் வந்தாலும் உடனே நான் எழுந்து நின்று அவர்களிடம் ஒரு நிமிடம் உரையாடுவேன். ஆனால் கரீனா கபூர் இப்படி செய்யும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது என்று கூறினார். அப்போது பேசிய அவரின் மனைவி சுதா, அவருக்கு மில்லியன் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.
அதனால் அனைவருக்கும் ஹலோ சொல்லி சோர்வடைந்து இருப்பார் என்று கூறிய நிலையில் பலரும் சிரித்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நாராயண மூர்த்தியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சிலர் அவர் இப்படி திமிராக இருந்ததால்தான் தற்போது சினிமாவே அவரை புறக்கணித்து விட்டது என கூறி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க