LATEST NEWS
80s நடிகை லட்சுமிக்கு மொத்தம் இத்தனை கணவரா?… ஐஸ்வர்யா இவருக்கு பிறந்த மகளா?.. பல வருட உண்மையை அவிழ்த்த பிரபலம்..!!
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை லட்சுமி. இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படத்தில் அடக்கமான மருமகளாக நடித்து புகழ்பெற்றவர். இந்த திரைப்படத்திற்கு முன்பு பல நூறு படங்கள் லட்சுமி நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் பிலிம்பேர் விருதுகள், கர்நாடக அரசு விருதுகள், கேரளா அரசு விருது மற்றும் தெலுங்கு சினிமாவின் நந்தி விருது என எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார்.
இவர் கேரளாவை சேர்ந்த இன்சூரன்ஸ் கம்பெனியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் இவர் குறித்து பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன், நடிகை லட்சுமி மோகன் என்பவரை பிரிவதற்கு முன்பு லட்சுமிக்கு திருமணம் ஆகி இருந்தது. பாஸ்கர் என்ற சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை தான் லட்சுமி முதலில் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பிறந்தவர் தான் ஐஸ்வர்யா.
அதன் பிறகு பாஸ்கரும் லட்சுமியும் பிரிந்து விட்ட நிலையில் மோகன் என்பவரை இரண்டாவதாக லக்ஷ்மி திருமணம் செய்து கொண்டார். அவருடன் ஏற்பட்ட பிரிவுக்கு பிறகு தான் சிவச்சந்திரன் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். சட்டப்படி லட்சுமிக்கு மொத்தம் மூன்று கணவர்கள். இப்போது ஐஸ்வர்யா லட்சுமி உடன் இல்லை. தி நகரில் உள்ள அப்பா பாஸ்கரின் அடுக்குமாடி குடியிருப்பில் ஐஸ்வர்யா வசித்து வருகிறார் என பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
