VIDEOS
“டேய் கேடுகெட்ட நாயே”… தவறாக பேசியவரை வறுத்தெடுத்த நடிகை கஸ்தூரி… வைரல் வீடியோ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் 1992 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார். இவரின் நடிப்பில் வெளியான ஆத்தா உன் கோவிலிலே,செந்தமிழ் பாட்டு மற்றும் ராசாத்தி வரும் நாள் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
இப்படி சினிமாவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் சக்கரவர்த்தி என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் கால் பதித்துள்ளார். அதே சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அடிக்கடி சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அதன்படி கஸ்தூரி கடந்த 2017 ஆம் ஆண்டு லீலா பேலஸ் பாரில் 41 ஆயிரம் பில் கட்டாமல் எஸ்கேப் ஆனதாக ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்து உள்ளார். அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, அது ஒரு கல்யாணத்திற்கு சென்று என் சகோதரியுடன் ஆட்டம் போட்டதாக கூறி பதிலடி கொடுத்தார்.
மேலும் டேய் கேடுகெட்ட நாயே, இது ஒரு கல்யாண வரவேற்பு, Banquet settings. பாட்டு கச்சேரியை என் சகோதரியும் நானும் ரசிக்கிறோம். குடிகார காமாலை கண்ணுக்கு எல்லாமே மஞ்சளா தான் தெரியும். போடா புறம்போக்கு என கேவலமாக திட்டி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Night club🍸👯🎶 pic.twitter.com/MgVcyUQzJS
— Roshan (@Roshanrules67) July 13, 2023