LATEST NEWS
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டி தூக்கிய தென்னிந்திய நடிகர்…. எந்த படத்திற்கு தெரியுமா..??

ஒவ்வொரு வருடமும் இந்திய அரசால் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் நிலையில் 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இருந்து அறிவிக்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருது இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.