குட்டி கிருஷ்ணன் வேடத்தில் நயன்தாராவின் உயிர், உலக்.. க்யூட் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டி கிருஷ்ணன் வேடத்தில் நயன்தாராவின் உயிர், உலக்.. க்யூட் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெறும் ஸ்டார் நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடி தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் கடந்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கு மாதங்களில் வாடகத்தை மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டதாக அறிவித்தனர்.

தற்போது இருவரும் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அடிக்கடி தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை மறைத்து வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் தங்கள் குழந்தைகளின் முகத்தை இதுவரை வெளியிடாமல் இருந்த நயன்தாரா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஒன்றை திறந்து மகன்களுடன் இருக்கும் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவர் இந்த வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களில் ஏராளமான லைக்குகள் குவிந்தன.

Advertisement

இதனைத் தொடர்ந்து நயன்தாரா ஷாருக்கான் உடன் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் டிரைலரையும் நயன்தாரா பகிர்ந்திருந்தார். இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது இரண்டு மகன்களுக்கும் கிருஷ்ணன் வேடமணிந்து வீட்டில் வழிபாடு செய்துள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vignesh Shivan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@wikkiofficial)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in