CINEMA
அந்த இயக்குநர் அழைத்தால் நடிக்க ஆவலாக இருக்கிறேன்…. நித்யா மேனன் ஓபன் டாக்..!!
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நித்யா மேனன். நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் கதாநாயகியாக நடித்த அசத்தியிருந்தார். இதற்காக தேசிய விருதும் வாங்கியிருந்தார்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் விக்ரமாதித்ய மோத்வானேவுடன் பணியாற்ற நித்யா மேனன் விருப்பம் தெரிவித்துள்ளாராம். இந்தியில் தனக்கு ‘லூட்டேரா’ என்ற படம் மிகவும் பிடிக்கும் என்றும், அந்த படத்தின் இயக்குநர் மோத்வானே தன்னை அழைத்தால் அவரோடு இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார்.