CINEMA
புதிய படத்தில் கமிட்டாகியுள்ள நடிகர் விஜய் சேதுபதி…. ஹீரோயின் அந்த நடிகையாம்…. அதிகாரபூர்வ தகவல்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக வலம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பார். இவர் இறுதியாக விடுதலை திரைப்படத்தின் சூரி உடன் இணைந்து நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்து வருகிறது
இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருவதாகவும் படப்பிடிப்பு நித்தியா மேனன் விரைவில் இணைவார் எனவும் பட குழு தெரிவித்துள்ளது. திரைப்படத்தின் பெயர், இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விவரங்கள் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.