வாழை படத்தை கட்டாயம் ரஜினி, கமல் ரசிகர்கள் பாக்கணுமாம்…. ஏன் தெரியுமா..?? - cinefeeds
Connect with us

CINEMA

வாழை படத்தை கட்டாயம் ரஜினி, கமல் ரசிகர்கள் பாக்கணுமாம்…. ஏன் தெரியுமா..??

Published

on

பரியேறும் பெருமாள் என்ற படத்தில் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர் நடிப்பில் கடந்த 2018 ஆம் வருடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியானது தான் பரியேறும் பெருமாள். அதன் பிறகு கர்ணன் படத்தை எடுத்தார். அடுத்ததாக உதயநிதியை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் மாரி செல்வராஜ் தன்னுடைய சொந்த தயாரிப்பில் வாழை என்ற படத்தை இயக்கியுள்ளார்.

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் தன்னுடைய பயோபிக்காக வாழை திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.  இன்று திரையில் இந்த படம். வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது ஏற்கனவே இந்த படத்தை திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் பிரிமியர் ஷோவில் பார்த்துவிட்டு பாராட்டி இருக்கிறார்கள். குறிப்பாக ரஜினி மற்றும் கமலின் ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ஒரு சில ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Advertisement

ஏனெனில் அந்த அளவிற்கு வாழைப் படத்தில் ரஜினி மற்றும் கமலின் ரெபரென்ஸ் காட்சிகள் உனது. தியேட்டரில் அந்த ரெஃபரன்ஸ் காட்சிகள் வரும்போது கைதட்டல்கள் பறக்கிறதாம். எனவே ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்கிறார்கள். கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் தேடுகின்ற படத்தை பார்க்கும் படியும் படம் பார்த்தவர்கள் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement