CINEMA
பெரிய பட்ஜெட் படமா இருந்தாலும்…. அதுமாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன் – நித்யா மேனன்…!!

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நித்யா மேனன். நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் கதாநாயகியாக நடித்த அசத்தியிருந்தார். இதற்காக தேசிய விருதும் வாங்கியிருந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், அதிக செலவில் பிரமாண்டமாக தயாராகும் மசாலா படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிராகரித்து விடுவேன். அதுமாதிரியா படங்களில் நடிக்க எனக்கு பிடிக்காது. நல்ல கதாபாத்திரமாக இருந்தால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.