LATEST NEWS
மக்களே உஷார்..! குடையை எடுத்துட்டு வெளியே போங்க.. 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்..!!
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக மக்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள இந்த வானிலை எச்சரிக்கையின்படி, இந்த நான்கு மாவட்டங்களிலும் வழக்கத்தை விட அதிக அளவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்ட வாய்ப்புள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
