LATEST NEWS
BREAKING : “போராட்டம் நடத்த அனுமதியில்லை..” அபிஜீத் திப்கேவுக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ்.!!
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே தங்கியிருக்கும் வீட்டிற்கு டெல்லி போலீசார் நேரில் சென்று, கன்னாட் பிளேஸ் பகுதியில் இன்று திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை நடத்தக் கூடாது என முறைப்படி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளனர். கன்னாட் பிளேஸ் பகுதியில் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழ் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள காவல் துறை, இந்தத் தடையை மீறி அப்பகுதிக்குச் சென்று மக்கள் கூடினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
சி.ஜே.பி அமைப்பின் தலைவர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரான்கா ஆகியோர் ஜந்தர் மந்தர் பகுதியில் தேசியக் கொடியுடன் நுழைந்து போராடியதற்காக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து கன்னாட் பிளேஸ் சென்ட்ரல் பார்க் பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு ‘லெஹ்ரா தோ திரங்கா’ பேரணி நடத்த அபிஜீத் திப்கே அழைப்பு விடுத்திருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 6,000-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
