ரொம்ப நாருது உங்க வாய்… உங்களைப் பார்த்தா TTE மாதிரி இல்ல.. திருடன் மாதிரி இருக்கு.. குடிகார ரயில்வே ஊழியரால் அலறிய பெண் பயணி.. பரபரப்பு வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரொம்ப நாருது உங்க வாய்… உங்களைப் பார்த்தா TTE மாதிரி இல்ல.. திருடன் மாதிரி இருக்கு.. குடிகார ரயில்வே ஊழியரால் அலறிய பெண் பயணி.. பரபரப்பு வீடியோ..!!

Published

on

ரயிலில் தனியாகப் பயணம் செய்த இளம்பெண் ஒருவரிடம், பயணச் சீட்டு பரிசோதகர் போல வந்த நபர் நடந்து கொண்ட வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் டிக்கெட் பரிசோதனைக்காக வந்த அந்த நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பெண், அவரது வாயிலிருந்து கடுமையான மது வாடை வீசுவதை உணர்ந்து, “உங்க வாயிலிருந்து ரொம்ப மோசமான நாற்றம் வீசுகிறது” என்று முகத்திற்கு நேராகக் கூறியுள்ளார். இதைக் கேட்டவுடன் அந்த நபர் அங்கிருந்து நழுவிச் செல்ல முயன்றுள்ளார்.

அவர் தப்பியோட முயன்றதைக் கண்டு ஆவேசமடைந்த அந்தப் பெண், அவரைத் தடுத்து நிறுத்தி, “ஓடாமல் என் கேள்விக்கு முதலில் பதிலளித்து விட்டுச் செல்லுங்கள். உங்களைப் பார்த்தால் டிடிஇ போலத் தெரியவில்லை, திருடன் போலத் தெரிகிறது” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அந்த நபரின் சட்டையில் அதிகாரப்பூர்வ டிடிஇ அடையாளப் பேட்ஜ் இல்லாததையும், அவர் மிகத் தெளிவாக மது அருந்தியிருப்பதையும் அந்தப் பெண் அங்கிருந்த மற்றவர்களின் முன்னிலையில் அம்பலப்படுத்தியுள்ளார்.

Advertisement

ரயில் பெட்டியில் தான் தனியாகப் பயணம் செய்யும் வேளையில், பொறுப்பற்ற முறையில் குடித்துவிட்டு வந்த இந்த நபருடன் எவ்வாறு பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியும் என்று அந்தப் பெண் ஆத்திரத்துடன் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம், இரயில்வே துறையில் பணியாற்றும் சில ஊழியர்களின் அலட்சியப் போக்கையும், ரயில்களில் தனியாகப் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்த அஞ்சத்தக்கக் கேள்விகளையும் மீண்டும் எழுப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in