“எதுவும் நம்பாதீங்க…” போலி வீடியோவை பரப்பினால் சிறை தான்… பிரபல யூடியூபர் கைது வதந்தி குறித்து காவல்துறை கொடுத்த பகீர் எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எதுவும் நம்பாதீங்க…” போலி வீடியோவை பரப்பினால் சிறை தான்… பிரபல யூடியூபர் கைது வதந்தி குறித்து காவல்துறை கொடுத்த பகீர் எச்சரிக்கை..!!

Published

on

பிரபல யூடியூபர் துருவ் ரதி காரில் அழைத்துச் செல்லப்பட்டு நோய்டா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் தகவல்கள் மற்றும் வீடியோக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், அடிப்படையற்றவை என்றும் நோய்டா காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

சமூக வலைதளமான ‘X’ தளத்தில் இத்தகவல் பரவியதைத் தொடர்ந்து தெளிவுபடுத்தியுள்ள கௌதம் புத் நகர் காவல் ஆணையரகம், துருவ் ரதி கைது செய்யப்பட்டதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப்புறம்பானவை என்று தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் தவறான வதந்திகளைப் பொதுமக்கள் யாரும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement
https://twitter.com/i/status/2110985962562212323

போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது தற்போதைய சட்ட விதிகளின்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. தவறான தகவல்களைப் பகிர்வதற்கு முன்பாக அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in