அதிமுகவுக்கு அடுத்த ஷாக்… இரவோடு இரவாக தவெக கொடியைப் பிடித்த சசிகலாவின் ‘ரைட் ஹேண்ட்’..! ஆடிப்போன அரசியல் களம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிமுகவுக்கு அடுத்த ஷாக்… இரவோடு இரவாக தவெக கொடியைப் பிடித்த சசிகலாவின் ‘ரைட் ஹேண்ட்’..! ஆடிப்போன அரசியல் களம்..!!!

Published

on

சசிகலாவின் நம்பிக்கைக்குரிய வழக்கறிஞராகவும், அவரது சொத்துக் குவிப்பு வழக்கு, அதிமுக தொடர்பான சிவில் விவகாரங்கள் மற்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு நியாயங்களை மிக வலுவாக எடுத்துரைத்து சட்டப் போராட்டம் நடத்தியவருமான பிரபல வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலை எதிர்நோக்கித் தனது கட்சியை வலுப்படுத்தி வரும் விஜய், பல்வேறு முக்கியத் தலைவர்களையும் பிரபலங்களையும் கட்சியில் இணைத்து வருகிறார். அந்த வகையில், அனுபவமிக்க முன்னணி வழக்கறிஞர் ஒருவரைத் தவெகவுக்குள் கொண்டு வந்ததன் மூலம், கட்சியின் சட்டப் பிரிவு மற்றும் அரசியல் ரீதியான வியூகங்கள் மேலும் பலமடையும் என்று கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Advertisement

அமமுகவின் முதன்மை வழக்கறிஞராகவும் பணியாற்றிய ராஜா செந்தூர் பாண்டியன், தவெகவின் முக்கிய நிர்வாகியான சி.டி.ஆர். நிர்மல் குமார் முன்னிலையில் தங்களை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டார். முக்கிய சட்டப் போராட்டங்களை முன்னெடுத்த அனுபவமிக்க முன்னணி வழக்கறிஞர் ஒருவர் இரவோடு இரவாகத் தவெகவில் இணைந்த இந்தச் சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in