“அவரா இது?!”.. கணவனைப் பாம்பால் தீர்த்துக் கட்டிய டாமிணி… சிறையில் செய்த ‘திடுக்கிடும்’ புது காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவரா இது?!”.. கணவனைப் பாம்பால் தீர்த்துக் கட்டிய டாமிணி… சிறையில் செய்த ‘திடுக்கிடும்’ புது காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்..!!

Published

on

தன் கணவனை விஷப் பாம்பைக் கடிக்க வைத்துப் படுகொலை செய்த டாமிணி மற்றும் அவரது காதலனான பள்ளிப் பேருந்து ஓட்டுநர் துஷார் ஆகியோர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் இருக்கும் தனது நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவிட விரும்புவதாக டாமிணி சிறை அதிகாரியிடம் தெரிவித்தார். தான் ஏற்கனவே ஆசிரியைப் பணியில் அனுபவம் உள்ளவர் என்று அவர் கூறியதைத் தொடர்ந்து, சிறை அதிகாரிகளால் அவருக்குச் சிறை நூலகத்தைப் பராமரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

இந்த நூலகப் பொறுப்பைப் பெற்ற பிறகு, டாமிணி நூலகத்திற்காக இராமாயணப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். அத்துடன் நின்றுவிடாமல், சிறையிலுள்ள பெண் கைதிகளுக்கும் குழந்தைகளுக்கும் இராமாயணம் மற்றும் சுந்தரகாண்டத்தைக் கற்பிக்க விரும்புவதாகவும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் சிறை வாழ்க்கையிலும் கல்வியையும் ஆன்மீகத்தையும் பரப்பத் தான் பங்களிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in