CRIME
அடப்பாவமே.. இது என்ன கொடுமை!… காதலனுடன் சென்ற மகளுக்கு நேர்ந்த பயங்கரம்… சொந்தக் குடும்பமே செய்த கொடூர சம்பவம்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!!
பஞ்சாப் மாநிலம் பரித்கோட் மாவட்டம் கோட்கபுரா அருகே, குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாகக் காதலித்துத் திருமணம் செய்த 20 வயதான மஹக்ப்ரீத் கவுர் என்ற பெண், கௌரவக் கொலை சந்தேகத்தின் பேரில் அவரது சொந்தக் குடும்பத்தினராலேயே கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த மே 4-ஆம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த ஜகதீப் சிங் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட மஹக்ப்ரீத், கணவருடன் அண்டை மாவட்டத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இந்தத் தம்பதியினரை மஹக்ப்ரீத்தின் குடும்பத்தினர் வழிமறித்துள்ளனர். கணவர் ஜகதீப் தப்பி ஓடிய நிலையில், சிக்கிய மஹக்ப்ரீத்தைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை செய்துவிட்டு, உடலை தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள வயல்வெளியில் வீசிவிட்டுத் தப்பியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்கபுரா நகரக் காவல்துறையினர் மற்றும் தடயவியல் குழுவினர் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகப் பரித்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இக்காதல் திருமணத்தில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பே இந்தக் கொடூரக் கொலைக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
