ஆண் நண்பருடன் விடுதியில் தங்கிய ரயில்வே பெண் ஊழியர்.. பாத்ரூம் விட்டு வெளியவே வரல… உள்ளே திறந்து பார்த்தபோது காத்திருந்த பயங்கரம்.. ஏலகிரியில் நடந்தது என்ன..? – cinefeeds
Connect with us

CRIME

ஆண் நண்பருடன் விடுதியில் தங்கிய ரயில்வே பெண் ஊழியர்.. பாத்ரூம் விட்டு வெளியவே வரல… உள்ளே திறந்து பார்த்தபோது காத்திருந்த பயங்கரம்.. ஏலகிரியில் நடந்தது என்ன..?

Published

on

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த தமிழரசி (43) என்ற பெண்மணி, தனது கணவரின் மறைவுக்குப் பின் கருணை அடிப்படையில் ரயில்வே துறையில் வேலை பெற்று, ஆம்பூர் ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பணியாற்றி வரும் யுவராஜ் (44) என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அவ்வப்போது பல்வேறு இடங்களுக்கு ஒன்றாகச் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில், இருவரும் ஏலகிரி மலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கு மது அருந்தியபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதன் பிறகு கழிவறைக்குச் சென்ற தமிழரசி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், விடுதி ஊழியர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் அங்கே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

Advertisement

தகவலறிந்து வந்த ஏலகிரி மலை போலீசார் தமிழரசியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ஆரம்பத்தில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்ட இந்தச் சம்பவம், பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து, அவருடன் தங்கியிருந்த ரயில்வே ஊழியர் யுவராஜை போலீசார் கைது செய்து, இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in